நகைச்சுவை நடிகர் வரதுக்குட்டி காலமானார்!
நகைச்சுவை நடிகர் வரதுக்குட்டி காலமானார்!@sbkhanthan

நகைச்சுவை நடிகர் வரதுக்குட்டி காலமானார்!

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
Published on

நகைச்சுவை நடிகர் வரதுக்குட்டி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் வரதுக்குட்டி. ஸ்ரீ கோபிநாத ராவ் என்ற குள்ள கோபி கிரேசி மோகனின் குழுவிலும் நடித்து வந்தார்.

கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற குழுவின் மூத்த உறுப்பினரான இவர் மேடை நாடங்களின் மூலம் பிரபலமடைந்தார்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் வரதுக்குட்டி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். நடிகர் சதீஷ் உட்பட திரையுலகினர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வரதுக்குட்டியின் மறைவு குறித்து கிரேஸி கிரியேஷன்ஸைச் சேர்ந்த நடிகரும், கிரேஸி மோகனின் சகோதரருமான மாது பாலாஜி உருக்கமாக பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“கோபி ஜூலை 5 அன்று காலமானார். 1979 முதல் எங்களது குழுவில் அவர் இருக்கிறார். எங்கள் அனைவருக்கும் நெருங்கிய நண்பர். சில நாள்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வபோது மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் மிகவும் நல்ல மனிதர். அவர் இருக்கும் இடம் சிரிப்பாகவும், சத்தமாகவும் இருக்கும். கலாட்டா செய்வதில் மிகவும் சிறந்தவர். ஒரு நகைச்சுவை சொன்னால் அனைவரும் பயங்கரமாக சிரிப்பார்கள். அவர் கிரிக்கெட் பார்க்கமாட்டார், இருந்தாலும் எங்களோடு டெஸ்ட் ஆட்டங்களை பார்க்க வருவார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரதுக்குட்டி கதாபாத்திரம் மூலம் பிரபலமடைந்தார். 45 வருடங்களாக எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்த ஒரு நல்ல நண்பன் ஒரு நல்ல மனிதனை நாங்கள் இழந்துவிட்டோம். கிரேஸி மோகனுக்கும் அவர் நெருங்கிய நண்பர். அவருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in