நடிகை வரலட்சுமி - நிகோலய் சச்தேவ் ஜோடிக்கு திருமணம்!

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.
வரலட்சுமி - நிகோலய் சச்தேவ் ஜோடிக்கு திருமணம்!
வரலட்சுமி - நிகோலய் சச்தேவ் ஜோடிக்கு திருமணம்!@Udhaystalin
1 min read

பிரபல நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி - தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் ஜோடிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

2012-ல் ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் வரலட்சுமி. இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி- 2, சர்கார் போன்ற பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் வரலட்சுமி - நிகோலய் சச்தேவின் நிச்சயதார்த்தம் மும்பையில் மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் அவர்களின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் நேற்று (ஜூலை 3) கோலாகலமாக நடைபெற்றது. இதன் பிறகு சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in