வணங்கான் தலைப்பை பயன்படுத்த தடைக்கோரி மேல்முறையீடு!

வணங்கான் தலைப்பை பயன்படுத்த தடைக்கோரி மேல்முறையீடு!

முன்னதாக, 2020-ல் இதேபோல் தயாரிப்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
Published on

வணங்கான் தலைப்பை பயன்படுத்த தடைக்கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கி வரும் படம் ‘வணங்கான்’. இப்படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் போன்ற பலரும் நடிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.

‘வணங்கான்’ படத்தின் டிரைலர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் வணங்கான் தலைப்பை பயன்படுத்த தடைக்கோரி தயாரிப்பாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக இயக்குநர் பாலா பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 2020-ல் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சங்கத்தில் வணங்கான் என்ற தலைப்பை பதிவு செய்ததாகவும், தொடர்ந்து அதனை புதுப்பித்து வந்ததாகவும் தயாரிப்பாளர் சரவணன் தெரிவித்திருந்தார். மேலும் வணங்கான் தலைப்பை படக்குழுவினர் பயன்படுத்தகூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

logo
Kizhakku News
kizhakkunews.in