அருண் விஜயின் ‘வணங்கான்’ டிரைலர் வெளியீடு!

இதுவரை அருண் விஜய் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக இது அமைந்துள்ளது.
அருண் விஜயின் ‘வணங்கான்’ டிரைலர் வெளியீடு!
அருண் விஜயின் ‘வணங்கான்’ டிரைலர் வெளியீடு!@VHouseProductions

பாலா இயக்கத்தில் அருண் விஜயின் ‘வணங்கான்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தமிழ்த் திரையுலகின் சிறந்த இயக்குநரான பாலா இயக்கி வரும் படம் ‘வணங்கான்’. இப்படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் போன்ற பலரும் நடித்துள்ளார்கள். இசை - ஜி.வி. பிரகாஷ்.

‘வணங்கான்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. வழக்கமான பாலா படங்களில் வரும் நாயகன் போலவே அருண் விஜய் காட்சி அளித்தாலும், இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக இது அமைந்துள்ளது.

அதிகமான அதிரடி சண்டைக் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் ஆகஸ்டில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in