.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
வடிவேலு - சுந்தர். சி இணைந்து நடிக்கும் ‘கேங்கர்ஸ்’ படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
சுந்தர். சி இயக்கத்தில் வின்னர், கிரி, லண்டன், ரெண்டு, நகரம் மறுபக்கம் போன்ற படங்களிலும், சுந்தர். சி நடிப்பில் தலைநகரம் படத்திலும் நடித்தார் வடிவேலு.
இவர்களின் கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாகவே அமைந்தது. இருவரும் கடைசியாக 2010-ல் நகரம் மறுபக்கம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.
இந்நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.
சுந்தர். சி இயக்கத்தில் சுந்தர். சி, வடிவேலு, கேத்ரின் தெரசா உட்பட பலரும் நடிக்கும் படம் ‘கேங்கர்ஸ்’. இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது.