
கடந்த வருடம் ஆஸ்கருக்கான சிறந்த வெளிநாட்டுப் படமாக இங்கிலாந்தின் The Zone of Interest தேர்வானது. முதல்முறையாக இந்த விருதை வென்ற இங்கிலாந்து, இந்த வருடம் இந்தியாவில் எடுக்கப்பட்ட சந்தோஷ் என்கிற ஹிந்திப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்புகிறது.
ஒரு ஹிந்திப் படம் இங்கிலாந்தால் ஆஸ்கருக்கு அனுப்பப்படுவது ஏன்?
லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான சந்தியா சூரி, ஆவணப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். அவர் இயக்கியுள்ள முதல் திரைப்படம் சந்தோஷ். இங்கிலாந்தின் டார்லிங்டென்னில் (Darlington) பிறந்து வளர்ந்தாலும் சந்தியாவின் பூர்வீகம் உத்தரப் பிரதேசம் என்பதால் லக்னெளவில் 44 நாள்களுக்கு சந்தோஷ் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.
சந்தோஷ் படம் கான் படவிழாவில் முதலில் திரையிடப்பட்டு கவனம் பெற்றது. இதையடுத்து, இங்கிலாந்து சார்பாக ஆஸ்கருக்குத் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய நடிகர் நடித்து இந்தியாவில் படமாக்கப்பட்டாலும் சந்தோஷ் இதுவரை இந்தியாவில் இன்னமும் வெளியாகவில்லை.
லாபதா லேடீஸ், சந்தோஷ் என இந்தமுறை இரு ஹிந்திப் படங்கள், சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெறப் போட்டியிடுகின்றன.