
நடிகை ஊர்மிளா மடோன்கர் கணவர் மோசின் அக்தர் மிர்ரிடமிருந்து விவாகரத்து கோரி மும்பை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும் மாடலுமான மோசின் என்பவரை ஊர்மிளா மடோன்கர் கடந்த 2016-ல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் திருமண வாழ்க்கையை 8 ஆண்டுகள் கழித்த நிலையில், மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் ஊர்மிளா விவாகரத்து கோரியுள்ளார்.
ஊர்மிளா சார்பாகவே 4 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவருடையப் பிரிவுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
ஊர்மிளாவைவிட மோசின் அக்தர் மிர் 10 வயது இளையவர். விவாகரத்து குறித்து இருவரும் இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் கால்பதித்த ஊர்மிளா, தமிழில் இந்தியன் படத்தில் நடித்துள்ளார்.