‘மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம்!

இப்படத்தின் புதிய கதாநாயகன் குறித்த அறிவிப்பு அக்டோபர் 15 அன்று வெளியாகும்.
‘மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம்!
1 min read

‘மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் செல்அம் அறிவித்துள்ளார்.

இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி அதை யூடியூபில் பதிவிட்டு அதன் மூலம் பல ரசிகர்களைக் கொண்டவர் டிடிஎஃப் வாசன். ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த காரணத்தால் டிடிஎஃப் வாசனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசனை மதுரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே இயக்குநர் செல்அம் இயக்கத்தில் ‘மஞ்சள் வீரன்’ என்கிற படத்தில் டிடிஎஃப் வாசன் நடித்து வந்தார். இந்நிலையில் சூழ்நிலை ஒத்துவராத காரணத்தால் இப்படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்அம் கூறியதாவது:

“அவர் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன், ஆனால் சூழ்நிலை ஒத்துவரவில்லை. இப்படத்தின் புதிய கதாநாயகன் குறித்த அறிவிப்பு அக்டோபர் 15 அன்று வெளியாகும். தயாரிப்பு நிறுவனம் என்னுடையது என்பதால் ‘மஞ்சள் வீரன்’ பெயருக்கு பிரச்னை வராது. படப்பிடிப்பு 35 சதவீதம் முடிந்துவிட்டது. படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in