திரைப்பட விருதுகள்: மாதவன், ஜோதிகா, சுதா கொங்கரா தேர்வு

2015-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திரைப்பட விருதுகள்: மாதவன், ஜோதிகா, சுதா கொங்கரா தேர்வு
1 min read

2015-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த படமாக தனி ஒருவனும் சிறந்த நடிகராக மாதவனும் சிறந்த நடிகையாக ஜோதிகாவும் சிறந்த இயக்குநராக சுதா கொங்கராவும் சிறந்த இசையமைப்பாளராக ஜிப்ரானும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

விருதுகள் வழங்கும் விழா வரும் புதன் கிழமை (மார்ச் 06) மாலை 6 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது. விருதாளர்களுக்குக் காசோலையும், விருதாளர்களின் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விருது விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்குச் காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி உரையாற்றவுள்ளார். அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு ஆகியோரும் இந்த விழாவில் உரையாற்றவுள்ளார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in