‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் விபத்து: ஜோஜூ ஜார்ஜுக்கு காலில் எலும்பு முறிவு

இரண்டு வாரங்கள் அவரை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஜோஜூ ஜார்ஜ்
ஜோஜூ ஜார்ஜ்

‘தக் லைஃப்’ படப்பிடிப்பின் போது நடிகர் ஜோஜூ ஜார்ஜுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

நடிகர் கமல் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலரும் நடிக்கின்றனர். இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் ஜோஜூ ஜார்ஜ் ஹெலிகாப்டரிலிருந்து குதிக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில் எதிர்பாராத வகையில் ஜோஜூ ஜார்ஜ் கீழே விழுந்து அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதன் பிறகு அவரை இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in