கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

"உத்தம வில்லன் படத்தின் நஷ்டத்திற்கு வேறு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கமல் கூறினார்”.
கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!
கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!ANI

நடிகர் கமல் மீது திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் ‘உத்தம வில்லன்’. இப்படத்தில் கமல் நடித்தார். ரூ. 50 கோடியில் ஒரு படத்தை தயாரித்துக் கொடுப்பதாக இந்தப் படத்துக்கு திருப்பதி பிரதர்ஸூடன் ஒப்பந்தம் போட்டுள்ளார் கமல். ஆனால், இப்படம் வெளியாகி தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியாகக் கூறபப்டுகிறது.

இந்நிலையில் ‘உத்தம வில்லன்’ படத்தின் நஷ்டத்திற்கு வேறு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கமல் கூறியதாகவும், 9 ஆண்டுகளாக இன்னும் எங்களுக்கு படம் நடித்துக் கொடுக்கவில்லை எனவும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது புகார் அளித்துள்ளது.

மேலும், தயாரிப்பாளர் சங்கம் இது தொடர்பாக கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் அளித்த உத்திரவாதபடி எங்களுக்கு விருப்பமான கதையில் நடிக்க கால்ஷீட் பெற்று தரவேண்டும் எனவும் திருப்பதி பிரதர்ஸ் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in