விஜயின் தி கோட் திரைப்படம் முதல் நாளில் ரூ. 126.32 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கோட் திரைப்படம் நேற்று வெளியானது. உலகம் முழுக்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் இந்தப் படம் வெளியானது. இரு விஜய், திரையரங்கு தருணங்கள் என படம் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடனே வெளியில் வருகிறார்கள்.
இருந்தபோதிலும், தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் லியோவை முந்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இந்த நிலையில் தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் நாளில் உலகம் முழுக்க ரூ. 126.32 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது தி கோட் படம்.
இதன்மூலம், லியோ படத்தின் முதல் நாள் வசூலைக் காட்டிலும் குறைவான வசூலையே கோட் அள்ளியுள்ளது. லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ. 148.5 கோடி வசூலித்தது.