நடிகை பார்வதி பிறந்தநாள்: வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த ‘தங்கலான்’ படக்குழு
@beemji

நடிகை பார்வதி பிறந்தநாள்: வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த ‘தங்கலான்’ படக்குழு

இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.
Published on

நடிகை பார்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.

இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

முன்னதாக ‘தங்கலான்’ படம் கடந்த ஜனவரி 26-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக படக்குழு தெரிவித்தது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகை பார்வதிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் ‘தங்கலான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் இந்த போஸ்டரை வெளியிட்டு “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கங்கம்மா” என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ‘தங்கலான்’ படத்தில் பார்வதி “கங்கம்மா” எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in