.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
தங்கலான் படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் தங்கலான்.
ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் நடிப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாராபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் வடமாநிலங்களில் ஆகஸ்ட் 30 அன்று வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.