விக்ரமின் தங்கலான்: வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இப்படத்தின் டிரைலர் ஜூலை 10 அன்று வெளியானது.
விக்ரமின் தங்கலான்: வெளியீட்டு தேதி அறிவிப்பு!
விக்ரமின் தங்கலான்: வெளியீட்டு தேதி அறிவிப்பு!@chiyaan
1 min read

விக்ரமின் ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.

இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் மாதத்தில் வெளியான நிலையில், ஜூலை 10 அன்று டிரைலர் வெளியானது.

கடந்த 3-4 ஆண்டுகளாகப் படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் ‘தங்கலான்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in