தங்கலான் வெளியீடு எப்போது?: தயாரிப்பாளர் தனஞ்செயன் பதில்

இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் மாதத்தில் வெளியானது.
தங்கலான்
தங்கலான் @chiyaan
1 min read

விக்ரமின் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.

இப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் மாதத்தில் வெளியான நிலையில், இதுவரை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

முன்னதாக ‘தங்கலான்’ படம் கடந்த ஜனவரி 26-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக படக்குழு தெரிவித்தது.

கடந்த 3-4 ஆண்டுகளாகப் படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் ‘தங்கலான்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

சமீபத்தில், நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “கங்குவா ரிலீஸ் தேதியை அறிவித்த பிறகு விக்ரமின் ரசிகர்கள் எனக்கு கடும் நெருக்கடியை அளித்தனர். முதலில் தங்கலான் ரிலீஸ் தேதியை ஏன் அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். விக்ரமின் ரசிகர்களே... தங்கலான் படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும். அதற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும்” என்றார்.

தனஞ்ஜெயன் இதுபோல தெரிவித்தாலும் படக்குழுவினரிடம் இருந்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in