‘டீன்ஸ்’
‘டீன்ஸ்’@immancomposer

‘இந்தியன் 2’ உடன் மோதும் ‘டீன்ஸ்’

கடைசியாக இவர் இயக்கிய ‘இரவின் நிழல்’ படம் 2022-ல் வெளியானது.

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கும் ‘டீன்ஸ்’ படம் ஜூலை 12 அன்று வெளியாக உள்ளது.

வித்தியாசமான முறையில் படங்களை இயக்குபவர் இயக்குநர் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கிய ‘இரவின் நிழல்’ படம் 2022-ல் வெளியானது.

அவரது அடுத்தப் படமான ‘டீன்ஸ்’ ஹாரர்-த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை - டி. இமான். இப்படத்தின் பாடல் வரிகளை பார்த்திபன் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இப்படம் ஜூலை 12 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இமான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதே நாளில் தான் கமலின் ‘இந்தியன் 2’ படமும் வெளியாக உள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in