அமரன் படம்: முதல்வர் விமர்சனம்!

அமரன் படம்: முதல்வர் விமர்சனம்!

“நாட்டைப் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கும், நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட்”.
Published on

அமரன் படம் இன்று வெளியான நிலையில் அப்படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்துள்ள படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்.

இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் பதிவு:

“நண்பர் கலைஞானி கமலின் அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் படம் பார்த்தேன்.

புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜன், இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

நாட்டைப் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கும், நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in