
சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகள் தியாவுக்கு சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு, தியா மற்றும் தேவ் என ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் மகளான தியா, தனது பள்ளியில் நடைபெற்ற போட்டிக்காக ஆவணப் படம் ஒன்றை இயக்கி விருது பெற்றுள்ளார்.
அவர் இயக்கிய, ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப் படத்துக்காக சிறந்த திரைக்கதை எழுத்தாளர் விருதும், சிறந்த ஆவணப் படம் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜோதிகா, “பொழுதுபோக்கு துறையில் பெண்களுக்கு நடக்கும் விஷயங்களை ஆவணப் படமாக இயக்கியதற்கு பெருமைப்படுகிறேன் தியா. இதுபோன்ற விஷயங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.