மெய்யழகன் பிரேமுக்கு சூர்யா தந்த அன்புப் பரிசு!

கதவுகள் திறந்தால் கம்பீரமான வெள்ளை நிற தார்...
மெய்யழகன் பிரேமுக்கு சூர்யா தந்த அன்புப் பரிசு!
படம்: https://www.instagram.com/prem_storytelling
1 min read

மெய்யழகன் இயக்குநர் பிரேம்குமாருக்கு நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா, மஹிந்த்ரா தாரை அன்புப் பரிசாக அளித்துள்ளார்.

96 படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான பிரேம் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார். சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டது. மாஸ் கமர்ஷியல் படங்களுக்கு நிகராக பெரிய வெற்றியை அடையாவிட்டாலும் திரையரங்குகளில் வெளியானபோதே, இப்படம் நல்ல வரவேற்றைப் பெற்றது. ஓடிடி தளத்தில் வெளியானபோதும் பாராட்டுகள் குவிந்தன. படத்தில் உணர்வுகள் மற்றும் உறவுகள் குறித்து சமரசங்களின்றி பேசியது அனைவருக்கும் நெருக்கமானதாக அமைந்தது.

இந்நிலையில், இயக்குநர் பிரேமுக்கு மஹிந்த்ரா தாரை பரிசளித்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் மெய்யழகன் தயாரிப்பாளர் சூர்யா. இதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிகவும் அழகாக எழுதி விவரித்துள்ளார் பிரேம்.

"மஹிந்த்ரா தார் எனது கனவு வாகனம். நேற்று முன்தினம் வெள்ளை நிற தார் ராக்ஸ் ஏஎக்ஸ் 5எல் 4x4 புகைப்படத்தை அனுப்பி அது வந்துவிட்டதாக சூர்யா அண்ணா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ராஜசேகர் சாரை உடனடியாக அழைத்து, இதை வாங்க என்னிடம் தற்போது பணம் இல்லை சார் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே இது சூர்யா சாரிடமிருந்து உனக்காக வந்த பரிசு என்றார். எனக்குப் பேச்சே இல்லை. லக்‌ஷ்மி இல்லத்துக்கு அழைத்திருந்தார்கள். கதவுகள் திறந்தால் கம்பீரமான வெள்ளை நிற தார் ராக்ஸ் ஏஎக்ஸ் 5எல் 4x4 என்னுடன் நீண்ட பயணத்தை மேற்கொள்வதற்காகக் காத்திருந்தது. உடன் அன்பு மெய்யழகன் கார்த்தி இருந்தார். என் கனவுகளைத் திறப்பதற்கான சாவியை என்னிடம் ஒப்படைத்தார். சிறிய பயணம் மேற்கொண்டோம். என் அலுவலகத்துக்கு அதை எடுத்துச் சென்றேன். குறைந்தபட்சம் 50 கி.மீ. ஆவது வாகனத்தை இயக்கியிருப்பேன். இன்னும் எனக்கு கனவாகவே உள்ளது.

இதை நான் பரிசாகப் பார்க்கவில்லை. இளைய சகோதரரின் கனவை மூத்த சகோதரர் நனவாக்குவதாகவே பார்க்கிறேன்" என்று பிரேம் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in