
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை தணிக்கை செய்ய, ஒழுங்குபடுத்த தனிக் குழு அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை இருப்பதுபோல், ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை கிடையாது.
இந்நிலையில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை தணிக்கை செய்ய வேண்டும் என்றும், இதற்காக தனிக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக, ஓடிடி தணிக்கை குறித்த பிரச்னைகளை அரசு பார்த்துக்கொள்ளும், இதற்கு பொதுநல மனு அவசியமற்றது என்றும் தணிக்கை மற்றும் ஒழுங்குபடுத்துதல் அவசியமா இல்லையா என்பதை சம்பந்தப்பட்டவர்களுடன் அரசு ஆலோசித்து கொள்கை முடிவு எடுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.