ரஜினி படத்திலிருந்து சுந்தர். சி விலகல்! | Rajinikanth | Kamal Haasan | Sundar C |

குஷ்புவின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த அறிக்கையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது.
Sundar C opts out of Rajinikanth's film which was supposed to be produced by Kamal Haasan
ரஜினி, கமல், சுந்தர். சிபடம்: https://x.com/RKFI
1 min read

கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்திலிருந்து தான் விலகுவதாக இயக்குநர் சுந்தர். சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்டில் வெளியானது. தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி - கமல் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இப்படத்தை இயக்குநர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், பிரதீப் ரங்கநாதன் ஆகியோரில் யாரோ ஒருவர் இயக்கவுள்ளதாகப் பேச்சுகள் அடிபட்டன. மேலும், இப்படத்துக்கு நடுவே சுந்தர். சி இயக்கத்தில் சிறிய பொருட்செலவில் ஒரு படத்தில் நடிக்க ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தான் ரஜினியின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நவம்பர் 5 அன்று வெளியானது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் எதிர்பார்த்த மிக முக்கியமான கூட்டணி ரஜினி - கமல். இது நவம்பர் 5 அறிவிப்பின் மூலம் நடிப்பில் சாத்தியமாகவில்லை. ஆனால், தயாரிப்பில் சாத்தியமானது.

ரஜினியின் 173-வது படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது, இயக்குநர் சுந்தர். சி இப்படத்தை இயக்குகிறார் என்று ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 50 ஆண்டுகால நட்பு மற்றும் சகோதரத்துவத்தைக் கொண்டாடும் விதமாக இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது என கமல் ஹாசன் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

'தலைவர் 173' எனத் தற்காலிகமாகப் பெயர் சூட்டப்பட்டிருந்த இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் 2027 பொங்கலுக்கு வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடுவதையும் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் கமல் ஹாசன்.

இந்த நிலையில் தான் ரஜினிகாந்த் படத்திலிருந்து விலகுவதாக சுந்தர். சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சுந்தர். சியின் அறிக்கை குஷ்புவின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியானது.

அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது:

"கனத்த இதயத்துடன் முக்கியமான செய்தியைத் தங்களுடன் பகிர்கிறேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால், மதிப்புமிக்க தலைவர்173 (தற்காலிகமாகப் பெயர் சூட்டப்பட்டிருந்த ரஜினி படம்) படத்திலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். ரஜினி நடிக்க, கமல்ஹாசன் தயாரிக்க இந்தப் படம் என் கனவு நனவான தருணம்" என்று சுந்தர். சி தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த அறிக்கையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Summary

Sundar C opts out of Rajinikanth's film which was supposed to be produced by Kamal Haasan

Kamal Haasan | Rajinikanth | Sundar C | Raaj Kamal Films International |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in