இதெல்லாம் சுஜாதா எழுதிய வசனங்கள் இல்லையா?

‘சாகுற நாள் தெரிஞ்சு போச்சுனா வாழ்ற நாள் நரகமாயிடும்’ என்கிற வசனத்தை இயக்குநர் ஷங்கர் தான் எழுதினார்.
 சுஜாதா
சுஜாதா
1 min read

ஷங்கர் படங்களின் வசனங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் 1996-ல் வெளியான இந்தியன் படத்துக்கு பிரபல எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதினார். அதுவே இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படம்.

இதன் பிறகு தொடர்ச்சியாக 1998 - 2007 வரை ஜீன்ஸ் தவிர முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என ஷங்கரின் அனைத்துப் படங்களுக்கும் சுஜாதா தான் வசனம் எழுதினார்.

இந்நிலையில் இதெல்லாம் சுஜாதா எழுதிய வசனங்கள் என்று நாம் நினைத்த ஒரு சில வசனங்கள் ஷங்கராலும், அவரது உதவி இயக்குநர்களாலும் எழுதப்பட்டுள்ளது.

சிவாஜி படத்தில் வருகிற ‘சாகுற நாள் தெரிஞ்சு போச்சுனா வாழ்ற நாள் நரகமாயிடும்’ என்கிற வசனத்தை தான் எழுதியதாக இயக்குநர் ஷங்கர் பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியில் கூறியுள்ளார்.

அதே போல இந்தியன் படத்தில் ‘சின்ன வயசுல கொஞ்சும்போது மீசை குத்துதுனு அழுவான். அவனுக்கு வலிக்கக் கூடாதுங்கிறதுக்காகவே மீசையை இழந்த சேனாபதி, இன்னைக்கு அவனை இழக்கத் தயாராயிட்டேன்’ என்கிற வசனத்தை எழுதியவர் உதவி இயக்குநர் காந்தி கிருஷ்ணா என்று ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முத்துவடுகு டூரிங் டாக்கீஸ் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் இந்தியன் படத்தில் இடம்பெற்ற,

‘அப்பாவா? மகனா? என்பது முக்கியம் அல்ல, நாடா? வீடா? என்பது தான் முக்கியம்’

‘புத்திசாலித்தனமுனு நினைச்சு 2 பேரும் உயிரோட இருக்கனும்னு வேண்டிக்காத’

‘அந்நியர்கள் சுரண்டும் போது அடிச்சுஅடிச்சு ரேகை அழிஞ்ச கை டா இது, அக்கம்பக்கத்துல இருக்குறவன் பண்றத பாத்துட்டு சும்மா இருக்காது’ போன்ற வசனங்களை தான் எழுதியதாக முத்துவடுகு கூறியுள்ளார்.

இந்த வசனங்களை திரையரங்குகளில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்ததாகவும், ஷங்கர் தங்களுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்ததாகவும் அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in