கார்த்திக் குமார் குறித்து பேச சுசித்ராவுக்குத் தடை: உயர் நீதிமன்றம்

ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவிக்க சுசித்ராவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடகியும், கார்த்திக் குமாரின் முன்னாள் மனைவியுமான சுசித்ரா அண்மையில் சில யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளித்திருந்தார். இதில், கார்த்திக் குமார் குறித்தும் தமிழ்த் திரைத் துறை குறித்தும் ஏராளமான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.

சுசித்ராவின் கருத்துகள் இணையத்தில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, கார்த்திக் குமார் பேசியதாக இணையத்தில் ஒரு ஆடியோ கசிந்தது. சுசித்ரா பேசியதில் உண்மையில்லை என்றும், இணையத்தில் கசிந்த ஆடியோவில் இருக்கும் குரல் தன்னுடையது அல்ல என்றும் நடிகர் கார்த்திக் குமார் விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில், நேர்காணலில் தான் கூறிய கருத்துகள் அனைத்தையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, பொது மன்னிப்பை வெளியிட வேண்டும் என்று சுசித்ராவுக்கு கார்த்திக் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், சுசித்ரா பேசியது தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்க கோரி, நடிகர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in