ஸ்டண்ட் நடிகர் கோதண்டராமன் காலமானார்

கலகலப்பு படத்தில் பேய் கதாபாத்திரம் மூலம் பிரபலமடைந்தார் கோதண்டராமன்.
ஸ்டண்ட் நடிகர் கோதண்டராமன் காலமானார்
1 min read

தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான கோதண்டராமன் (எ) பேய் கிருஷ்ணன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராகப் பணிபுரிய தொடங்கி, பிறகு ஸ்டண்ட் இயக்குநராக உயர்ந்தார் கோதண்டராமன். கடந்த 25 வருடங்களாக தமிழ் சினிமாவில் பணிபுரிந்த கோதண்டராமன், கலகலப்பு படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பேய் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

விஜய், அஜித் ஆகியோர் படங்களான பகவதி, திருப்பதி, கிரீடம், வேதாளம் போன்றவற்றில் பணியாற்றியுள்ள கோதண்டராமன், பல படங்களில் துணை வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

65 வயதாகும் கோதண்டராமன், உடல் நலக்குறைவால் சென்னை பெரம்பூரில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in