இந்தியளவில் ஹிந்தியில் அதிக வசூல் செய்த ஜவான் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது ‘ஸ்த்ரீ 2’.
அமர் கௌஷிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்பட பலர் நடித்த ‘ஸ்த்ரீ 2’ படம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.
இப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆனாலும், இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 34-வது நாளில் இப்படம் ரூ. 2.5 கோடி வசூல் செய்துள்ளது.
ஏற்கெனவே இந்தியாவில் மட்டும் ரூ. 515 கோடி வசூல் செய்து பாகுபலி 2, அனிமல் ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது.
இந்நிலையில் இந்தியளவில் ஹிந்தியில் அதிக வசூல் செய்த ஜவான் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது ‘ஸ்த்ரீ 2’.
இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘ஜவான்’ (ரூ. 582.31 கோடி) முதல் இடத்தில் இருந்தது. தற்போது ரூ. 586 கோடி வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்துள்ளது ‘ஸ்த்ரீ 2’.
இதன் மூலம் இப்படம் இந்தியளவில் ஹிந்தியில் அதிக வசூல் செய்த படம் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளது.