ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் அமர் கெளசிக் இயக்கியுள்ள ஸ்த்ரீ 2 படம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியாகி தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
இந்தியளவில் ரூ. 600 கோடி வசூலித்த முதல் ஹிந்திப் படம் என்கிற சாதனையைப் படைத்துள்ளது ஸ்த்ரீ 2. 44 நாள்களில் இதுவரை ரூ. 610 கோடியை இந்தியாவில் வசூலித்துள்ளதாக பாலிவுட் பத்திரிகையாளர் தாரன் ஆதர்ஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல்முதலாக ரூ. 100 கோடியை எட்டிய முதல் ஹிந்திப் படம் கஜினி. அதற்கடுத்து ரூ. 200 கோடியை 3 இடியட்ஸூம் ரூ. 300 கோடியை பிகேவும் வசூலித்தன. இதன்பிறகு பாகுபலி 2 ஹிந்திப் பதிப்பு பாலிவுட்டில் முதல்முதலாக ரூ. 400, ரூ. 500 கோடி வசூலை எட்டிய நிலையில் அதன் சாதனையை முறியடித்து நிகர வசூலாக ரூ. 600 கோடியை இந்தியாவில் வசூலித்த முதல் ஹிந்திப் படம் என்கிற சாதனையை ஸ்த்ரீ 2 படைத்துள்ளது.
வசூலில் இந்த இலக்கை முதலில் எட்டிய ஹிந்திப் படங்கள் (இந்தியாவில்)
ரூ. 100 கோடி - கஜினி (2008)
ரூ. 200 கோடி - 3 இடியட்ஸ் (2009)
ரூ. 300 கோடி - பிகே (2014)
ரூ. 400 கோடி - பாகுபலி 2 (ஹிந்தி) (2017)
ரூ. 500 கோடி - பாகுபலி 2 (ஹிந்தி) (2017)
ரூ. 600 கோடி - ஸ்த்ரீ 2 (2024)