ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றி...: வாழை படத்தைப் பாராட்டிய முதல்வர்

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்...
வாழை படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
வாழை படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து@mari_selvaraj
1 min read

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டிள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 அன்று வெளியான படம் வாழை. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தைப் பாராட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் பதிவு

“உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி.

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்”.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜின் எக்ஸ் பதிவு

“என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்”.

logo
Kizhakku News
kizhakkunews.in