ராஜமௌலியின் ‘வாரணாசி’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு | SS Rajamouli |

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்...
ராஜமௌலியின் ‘வாரணாசி’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
ராஜமௌலியின் ‘வாரணாசி’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
1 min read

இயக்குநர் ராஜமௌலியின் வாரணாசி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் புதிய படம் வாரணாசி. ஆஸ்கர் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர். படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் பிரமாண்ட படைப்பாக இப்படம் கருதப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம், அறிவிப்பு வெளியான நாள்முதல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

எம்.எம். கீரவாணி இசையமைப்பு

நடிகர்கள் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

ஐதராபாத்தில் பிரமாண்ட விழா

கடந்த 2025 நவம்பர் 15 அன்று ஐதராபாத்தில் இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுத் தேதி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இந்நிலையில் இன்று படம் குறித்த முக்கிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வாரணாசி படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும், கென்யாவின் காடுகளில் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Summary

The release date of director Rajamouli's film Varanasi has been announced.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in