கமல் வாழ்க்கை வரலாற்றுப் படம்: ஷ்ருதி ஹாசன் விளக்கம்

“அப்பாவின் கதையை சிறப்பாக இயக்க பல திறமையான இயக்குநர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்”.
ஷ்ருதி ஹாசன்
ஷ்ருதி ஹாசன்@shrutihaasan

அப்பாவின் வாழ்க்கை கதையை நான் இயக்கினால் அது பாரபட்சமாக இருக்கும் என ஷ்ருதி ஹாசன் பேசியுள்ளார்.

நடிகையும், பாடகியுமான ஷ்ருதி ஹாசன் சலார் - 2 உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு கமல் மீதான அன்பை பகிர்ந்த அவர், “எனது தந்தை ஹீ மேனுக்கு நிகரான ஒரு சூப்பர் ஹீரோ” என்றார்.

ஷ்ருதி ஹாசன் பேசியதாவது:

“எனது தந்தை ஹீ மேனுக்கு நிகரான ஒரு சூப்பர் ஹீரோ. ஒரு நாள் எனது தந்தையை நான் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தேன். வகுப்பறையில் அமர்ந்திருப்பது போல், இயக்குநர் பேசுவதை கவனித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு இயக்குநரின் பணியைக் கண்டு வியந்தேன். அப்பாவின் வாழ்க்கை கதையை நான் இயக்கினால் அது பாரபட்சமாக இருக்கும். அவரின் கதையை சிறப்பாக இயக்க பல திறமையான இயக்குநர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in