எஸ்.பி. பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி. பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் சரண் முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
1966-ல் பின்னணி பாடகராக அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட 16 மொழிகளில் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவர் கடந்த 2020-ல் கொரோனா பாதிப்பால் காலமானார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் இன்றும் மக்களிடையே ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் அவரின் நினைவை போற்றும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி. பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் எஸ்.பி. சரண் முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.