விடுதலை - 2 ரிலீஸ் எப்போது?: சூரி தகவல்

"இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பு மீதமுள்ளது. இது மிகப்பெரியப் படமாக வந்துக் கொண்டிருக்கிறது".
சூரி
சூரி

விடுதலை - 2 படம் வருகிற ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன் என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.

நடிகர் சூரி நடித்த கருடன் படம் மே 31 அன்று வெளியாக உள்ளது. இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளித்து வருகிறார். இந்நிலையில் கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் விடுதலை - 2 படம் குறித்து சூரியிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சூரி, “விடுதலை - 2 படம் வருகிற ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன். இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பு மீதமுள்ளது. இது மிகப்பெரியப் படமாக வந்துக் கொண்டிருக்கிறது. நிறைய நடிகர்கள் நடிக்கவுள்ளனர். மஞ்சு வாரியர், சமுத்திரகனி என பலரும் நடிக்கவுள்ளனர். விடுதலை - 1 படத்தை ரசிகர்கள் எப்படி திரையரங்குகளில் ரசித்தார்களோ அதைவிட மூன்று மடங்கு இப்படத்தை ரசிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in