3-வது குழந்தைக்குத் தந்தையானார் சிவகார்த்திகேயன்!

"ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்”.
3-வது குழந்தைக்குத் தந்தையானார் சிவகார்த்திகேயன்!
3-வது குழந்தைக்குத் தந்தையானார் சிவகார்த்திகேயன்!@Siva_Kartikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு கடந்த 2010-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ள நிலையில் இந்த ஜோடிக்கு 3-வது குழந்தை பிறந்துள்ளது. நேற்று தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் தமிழ் திரையுலகில் மூன்று குழந்தைகள் உள்ள வெகு சிலருடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.

இது குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம், எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in