நடிகர் எஸ்.ஜே. சூர்யா மலையாளத்தில் அறிமுகமாக போவதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் இயக்குநர் விபின் தாஸ் இயக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளார். இதன் மூலம் மலையாளத் திரையுலகில் அவர் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் ஐதராபாத்தில் எஸ்.ஜே. சூர்யாவிடம் இயக்குநர் விபின் தாஸ் படத்தின் கதையைச் சொன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.