தான் பாடிய பாட்டிற்கு வந்த மீம்களால் மிகவும் பாதிக்கப்பட்டதாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா பேட்டியளித்துள்ளார்.
நானி நடிக்கும் ‘சூர்யாஸ் சாட்டர்டே’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் உட்பட பலரும் நடிக்கின்றனர்.
ஆகஸ்ட் 29 அன்று வெளியாக உள்ள இபப்டத்தின் புரமோஷன் தொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ் நேர்காணலில் பேசிய எஸ்.ஜே. சூர்யாவிடம் பாட்டு பாடச் சொன்னதற்கு, “எந்த ட்ரால்லயும் (Troll) மாட்டாமல் நல்ல பெயரை எடுத்திருந்தேன். அந்த நேர்காணலின் போது, நான் ஏற்கெனவே நல்ல தூக்கத்தில் இருந்தேன். என்னை உற்சாகப்படுத்தி பாட வைத்து, பயங்கரமாக கலாய்த்தார்கள்” என்றார்.
மேலும் அவரை பாடச் சொன்னதற்கு, “நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பாடுங்கள். என்னை விட்டுவிடுங்கள்” என்றார்.
அதேபோல், தன்னுடன் நேர்காணலில் அமர்ந்திருந்த நானி மற்றும் பிரியங்கா மோகனையும் பாட வேண்டாம் என்று நகைச்சுவை பாணியில் எச்சரித்தார்.
முன்னதாக, நேர்காணல் ஒன்றில் அன்பே ஆருயிரே படத்தில் இடம்பெற்ற மயிலிறகே பாடலை பாடியதற்காக எஸ்.ஜே. சூர்யாவை ரசிகர்கள் மீம்களால் கலாய்த்து தள்ளினர்.