நான் சினிமாவில் சாதிக்க வேண்டியதே இன்னும் நிறைய இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்துள்ள படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார். இப்படம் தீபாவளி (அக்.31) அன்று வெளியாக உள்ளது.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனிடம், அந்த துப்பாக்கி தற்போது சினிமாவில் இல்லை (கோட் பட காட்சியை குறிப்பிட்டு), நீங்கள் அந்த இடத்துக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “கோட் படத்தில் இடம்பெற்ற அந்த துப்பாக்கி காட்சியை சினிமாவில் நடந்த ஓர் அழகான நிகழ்வாகப் பார்க்கிறேன். விஜய் ஒரு மூத்த நடிகர். சக நடிகருடன் இணைந்து நடித்திருக்கிறார். அது அழகாக இருந்தது. நான் சினிமாவில் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.