சிவாஜி கணேசன் குடும்பத்தில் அடுத்த திருமணம்! | Sivaji Ganesan

கமலா ஹாசினியும் திரைத் துறை பின்னணியைக் கொண்டவர்.
சிவாஜி கணேசன் குடும்பத்தில் அடுத்த திருமணம்! | Sivaji Ganesan
1 min read

சிவாஜி கணேசன் சகோதரி பத்மாவதியின் மகன்வழிப் பேரனுக்கு சென்னையில் வியாழனன்று திருமணம் நடைபெறவுள்ளது.

சிவாஜி கணேசனின் உடன்பிறந்த சகோதரி பத்மாவதி. இவர் வேணுகோபால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பத்மாவதி மற்றும் வேணுகோபால் தம்பதியினரின் மகளை தான் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பத்மாவதி - வேணுகோபால் தம்பதியினரின் மகன்வழிப் பேரன் கோகுல். இவருக்கும் கமலா ஹாசினி என்பவருக்கும் சென்னையில் ஆகஸ்ட் 28 அன்று திருமணம் நடைபெறவுள்ளது.

கமலா ஹாசினியும் திரைத் துறை பின்னணியைக் கொண்டவர். தமிழ், கன்னடப் படங்களில் நடித்துள்ளவர் ஆந்திரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் நடிகர் சாய் குமார். இவருடைய சகோதரர் ஐயப்பா பி சர்மாவின் மகள் தான் கமலா ஹாசினி. ஐயப்பா பி சர்மாவும் படங்களில் நடித்துள்ளார்.

கோகுல் - கமலா ஹாசினியின் திருமணம் சென்னை தியாகராய நகரில் நடைபெறவுள்ளது. இத்திருமணம் காதல் திருமணம் என்றும் சொல்லப்படுகிறது.

Sivaji Ganesan | Prabhu | Ram Kumar | Padmavathy | Sai Kumar

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in