பின்னணிப் பாடகர் வேல்முருகன் கைது!

ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னணி பாடகர் வேல்முருகன் கைது!
பின்னணி பாடகர் வேல்முருகன் கைது!

மெட்ரோ ரயில் பணி ஊழியரை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வடபழனி விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 11 அன்று அவ்வழியாக சென்ற பாடகர் வேல்முருகன் மெட்ரோ பணி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் கோபமடைந்த வேல்முருகன், இது குறித்து கேட்க வந்த உதவி மேலாளரை ஆபாசமாக பேசி, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வடிவேல் என்பவருக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து வடிவேல் வேல்முருகன் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது வழக்குபதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in