பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்

இளையராஜா இசையில் பூங்கதவே, ஆனந்த ராகம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மறக்க முடியாத பாடல்களைப் பாடிய...
பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்

இளையராஜா இசையில் பூங்கதவே, ஆனந்த ராகம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மறக்க முடியாத பாடல்களைப் பாடிய உமா ரமணன், உடல்நலக்குறைவால் இன்று காலமனார்.

ஆரம்பத்தில் பள்ளி, கல்லூரிகளில் பாடிப் பல பரிசுகள் வாங்கிய உமா எம்.ஏ. முடித்தவர். 1972-ல் ரமணின் இசைக்குழுவான மியூசியானோவில் இணைந்தார். ரமணனுடன் இணைந்து நிறைய கச்சேரிகள் செய்து பிறகு அவரையே 1976-ல் திருமணம் செய்துகொண்டார். ரமணன் இசையமைத்த நீரோட்டம் படத்தில் திரைப்படப் பின்னணிப் பாடகியாகத் தமிழில் அறிமுகமானார் உமா ரமணன். இளையராஜா இசையில் இன்னும் சில பக்கங்கள் என்கிற படத்தில் முதலில் பாடினார். எனினும் நிழல்கள் படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவா பாடல், உமா ரமணனுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. ஆனந்த ராகம், நீ பாதி நான் பாதி, பூபாளம் இசைக்கும் என இளையராஜா இசையில் இவர் பாடிய பல பாடல்கள் மிகவும் பிரபலமாகின. விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் கலந்தாச்சு பாடலும் உமா ரமணன் பாடியதுதான்.

2000-ம் வருடத்துக்குப் பிறகு படங்களில் பாடுவது குறைந்துவிட்டாலும் 6,000-க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார் உமா ரமணன். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in