தக் லைஃப் படத்தில் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கமல், சிம்பு ஆகியோர் இணைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.
தக் லைஃப் படத்தில் சிம்பு
தக் லைஃப் படத்தில் சிம்பு@RKFI

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

நடிகர் கமல் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் த்ரிஷா, அபிராமி, நாசர், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலரும் நடிக்கின்றனர். இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகி உள்ளது. படக்குழு வெளியிட்ட காணொளி மூலம் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகி உள்ளது. முன்னதாக இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இருவரும் இப்படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கமல், சிம்பு ஆகியோர் இணைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இதனால், சிம்பு இப்படத்தில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in