நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய சிம்பு!

தனது உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டார் வெங்கல் ராவ்.
சிம்பு
சிம்புANI

பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் தனக்கு உதவி செய்யுமாறு உருக்கமாக பேசி காணொளி வெளியிட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கி உதவி செய்துள்ளார் சிம்பு.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கல் ராவ். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் இதுவரை தமிழில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2022-ல் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டார் வெங்கல் ராவ். இதைத் தொடர்ந்து மீண்டும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டார். ஆந்திராவில் உள்ள தனது இல்லத்தில் அவர் சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு, வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வழங்கி உதவி செய்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in