
விஜய் 69 படத்தில் நடிப்பது குறித்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேட்டியளித்துள்ளார்.
விஜயின் 69-வது படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுவே விஜயின் கடைசிப் படம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி ஆகியோர் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இசை -அனிருத்.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த சிவராஜ்குமார், “விஜயின் 69-வது படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்தனர். ஆனால், என்னுடைய படப்பிடிப்பு தேதிகளை வைத்துதான் அப்படத்தில் நடிப்பேனா என்பதை முடிவு செய்யவேண்டும்.
இது விஜயின் கடைசி படம் என சொல்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் நடிப்பை விட்டு விலகக்கூடாது என விரும்புகிறேன். விஜய் ஒரு அற்புதமான நடிகர் மற்றும் நல்ல மனிதர். அவரது லட்சியத்தை நான் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.