ஷங்கரின் அடுத்த சுஜாதா யார்?
ஷங்கரின் அடுத்த சுஜாதா யார்?@shankarshanmugh

ஷங்கரின் அடுத்த சுஜாதா யார்?

1996 - 2007 வரை ஷங்கரின் ஒரு படம் தவிர அனைத்துப் படங்களுக்கும் சுஜாதா தான் வசனம் எழுதினார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவாகி உள்ளது. ஜூலை 12-ல் வெளியாகவுள்ளது.

ஷங்கர் படங்களின் வசனங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் 1996-ல் வெளியான இந்தியன் படத்துக்கு பிரபல எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதினார். அதுவே இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படம்.

இதன் பிறகு தொடர்ச்சியாக 1998 - 2007 வரை ஜீன்ஸ் தவிர முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என ஷங்கரின் அனைத்துப் படங்களுக்கும் சுஜாதா தான் வசனம் எழுதினார். ஜீன்ஸ் படத்துக்கு வசனம் - பாலகுமாரன். சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு ஜெயமோகன், சுபா, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் ஆகியோர் ஷங்கருடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள்.

இந்தியன் முதல் இந்தியன் - 2 வரை - ஷங்கர் படங்களுக்கு வசனம் எழுதியவர்கள்

இந்தியன், 1996, - சுஜாதா

ஜீன்ஸ், 1998, வசனம் - பாலகுமாரன்

முதல்வன், 1999, வசனம் - சுஜாதா

பாய்ஸ், 2003, வசனம் - சுஜாதா

அந்நியன், 2005, வசனம் - சுஜாதா

சிவாஜி, 2007, வசனம் - சுஜாதா

எந்திரன், 2010, வசனம் - சுஜாதா, ஷங்கர், மதன் கார்க்கி

நண்பன், 2012, வசனம் - ஷங்கர், மதன் கார்க்கி

ஐ, 2015, வசனம் - சுரேஷ் & பாலகிருஷ்ணன் (சுபா), ஷங்கர்

2.O, 2018, வசனம் - ஜெயமோகன், மதன் கார்க்கி, ஷங்கர்

இந்தியன்-2, 2024, வசனம் - ஜெயமோகன், லக்ஷ்மி சரவணகுமார், கபிலன் வைரமுத்து

logo
Kizhakku News
kizhakkunews.in