ஐபிஎல் ஆட்டத்தைக் காண வந்தபோது ஷாருக் கான்..
ஐபிஎல் ஆட்டத்தைக் காண வந்தபோது ஷாருக் கான்..

வெப்பவாதம்: நடிகர் ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதி!

ஐபிஎல் பிளேஆஃப் ஆட்டத்தைக் காண அஹமதாபாத் வந்த பிரபல நடிகர் ஷாருக் கான், வெப்பவாதம் (Heat stroke) காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதி.
Published on

நடிகர் ஷாருக் கான் வெப்பவாதம் காரணமாக அஹமதாபாதிலுள்ள கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் முதல் குவாலிஃபையர் ஆட்டம் அஹமதாபாதில் நேற்று நடைபெற்றது. ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தைக் காண ஷாருக் கான் தனது மகள் சுஹானா கான், இளைய மகன் அப்ரம் மற்றும் மேலாளர் பூஜா ஆகியோருடன் வந்திருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளர்கள் ஜூஹி சாவ்லா, ஜே மேத்தா உள்ளிட்டோரும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தைக் காண அஹமதாபாத் வந்திருந்தார்கள்.

கொல்கத்தா வெற்றி பெற்றவர்களுடன் ஷாருக் கான் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், ஷாருக் கானுக்கு வெப்பவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அவர் அஹமதாபாதிலுள்ள கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜூஹி சாவ்லாவும், ஜே மேத்தாவும் மருத்துவமனைக்குச் சென்று ஷாருக் கானைச் சந்தித்துள்ளார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in