
பிரபல சீரியல் நடிகை ஸ்ரிதிகாவுக்குத் திருமணம் நடக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மெட்டி ஒலி, நாதஸ்வரம் போன்ற மெகா தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரிதிகா. இந்நிலையில் அவர் நடிகர் ஆர்யனை திருமணம் செய்யப்போவதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
“நானும், ஆர்யனும் சில வருடங்களுக்கு முன்பு எங்களது முன்னாள் திருமண வாழ்க்கையில் இருந்து விலகினோம். நாங்கள் யாரையும் குறைகூற விரும்பவில்லை, அதேபோல கடந்த காலத்தில் நடந்ததைப் பற்றி தவறாக பேசவும் விரும்பவில்லை. ஏனென்றால் எங்களுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எங்களின் உண்மையான நட்பு, அதனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நம்பிக்கை அளிக்கிறது. உங்களது ஆதரவாலும், பெற்றோர்களின் ஆசியுடனும் நாங்கள் பதிவுத் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். இன்ஸ்டாகிராமில் சில பிரச்னைகள் இருப்பதால் எனது கணக்கின் பெயரை என்னால் மாற்ற முடியவில்லை, விரைவில் அதனை சரிசெய்ய முயற்சி செய்கிறோம்” என்றார்.