பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வது பாகத்தில் தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சரண்யா தனக்கு திருமணமானதை உறுதி செய்துள்ளார்.
சின்னத்திரை மூலம் பிரபலமான சரண்யா தனது திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்.
இந்நிலையில், ராகுல் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ராகுலின் பிறந்தநாள் அன்று அவருடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த சரண்யா, ‘என் கணவருக்கு இனிய பிறந்தநாள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் பலரும் ‘உங்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டதா?’ என்ற கேள்வியை எழுப்பினர்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 16) வரலட்சுமி பூஜை கொண்டாடப்பட்ட நிலையில் சரண்யாவும் வரலட்சுமி பூஜையைக் கொண்டாடியிருக்கிறார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ‘வாழ்கையில், முதல் வரலட்சுமி பூஜை அவருடன்’ என்று குறிப்பிட்டுருந்தார்.
மஞ்சள் தாலியுடனும், நெற்றிக் குங்குமத்துடனும் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர, இருவருக்கும் திருமணமானது உறுதியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.