
தனுஷ் செய்த சாதனைகளைப் பார்க்கும்போது பெருமையாக உணர்வதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன் போன்ற பலர் நடிப்பில் வரும் நவ. 29 அன்று வெளியாகும் படம் ‘சொர்கவாசல்’.
இப்படத்தின் புரமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன் தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
எஸ்எஸ் மியூசிக் யூடியூப் சேனலில் செல்வராகவன் பேசியதாவது:
“தனுஷ் செய்த சாதனைகளைப் பார்க்கும்போது பெருமையாக உணர்கிறேன். அவரின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உழைப்பை நான் ராயன் படத்தில் பணியாற்றும்போது தான் பார்த்தேன். பொதுவாக அவர் ஒரு வேலையாகவும், நான் ஒரு வேலையாகவும் சென்றுவிடுவோம்.
ராயன் படத்தில் இணைந்து பணியாற்றியதால் இன்னுமும் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் உள்ள மிருகத்தனமான உழைப்பைக் கண்டு வியந்தேன். கலை மீது அதிக ஆர்வம் இருந்தால் மட்டுமே இவ்வாறு உழைக்க முடியும். நிச்சயமாக அது கடவுள் கொடுத்த பரிசுதான்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.