.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
சினிமா ஒரு மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்றால் திரையரங்குகளில் இடைவேளையை நீக்க வேண்டும் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு, அறிமுக நடிகர் ஏகன் உட்பட பலர் நடிக்கும் படம் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’. இப்படம் செப். 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய சீனு ராமசாமி, தமிழ்நாட்டில் வெளியாகும் இணையத் தொடர்களுக்கு வரவேற்பு கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமி பேசியதாவது
“சினிமாவுக்கு முக்கியமான தேவை என்ன என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். ஒரு படம் வெளியாகிறது, வசூல் செய்கிறது, அதன் பிறகு அந்தப் படத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். எனவே சினிமா என்பது வணிகம் மட்டும்தானா என்கிற கேள்வி எழுகிறது. சினிமா ஒரு மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்றால் திரையரங்குகளில் இடைவேளையை நீக்க வேண்டும். இதனால் திரையரங்குகளில் கடை வைத்திருப்பவர்கள் என் மேல் கோபம் அடைய வேண்டாம்.
தமிழ்நாட்டில் வெளியாகும் இணையத் தொடர்களுக்கு வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால், மேற்கித்திய நாடுகளில் இணையத் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஏனென்றால் அவர்கள் முழு நீளப் படத்தை பார்த்து பழகியவர்கள். ஆனால் நாம் முதல் பாதி, 2-ம் பாதி என்று பார்த்து பழகியவர்கள். எனவே படத்தின் நீளம் அதிகமாக இருந்தால் நாம் விரும்புவதில்லை. ஒரு சினிமா என்பது முழு உடல், அதனை பாதியில் நிறுத்தி எப்படி இருந்தது என்று கேட்பதே தவறு” என்றார்.