.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
தன்னுடைய உறவினர்கள் சிலரால் கோவை மீது தனக்கு பயம் ஏற்பட்டதாக சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து நிபுணரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சமூக நலன் கருதி அவ்வபோது தனது இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளைப் பதிவிடுவார்.
இந்நிலையில் கோவை நகரம் பற்றிய தனது அனுபவத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
திவ்யா சத்யராஜின் பதிவு
“எனது உறவினர்கள் ஒரு சிலர் எனது வளர்ப்பு குறித்து அவதூறாகப் பேசியதால், கோவை மீது எனக்கு பயம் ஏற்பட்டது. ஒரு நாள் என்னை சில ஆண்கள் தாக்கினர். அன்றைய தினத்தில் எனக்கு மாதவிடாய் இருந்தது. அவ்வளவு பிரச்னைகளில் எனது போனும் தொலைந்து போனது. மீண்டும் சென்னைக்கு வந்த பிறகு, மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன்.
இதை கேட்டவுடன் அப்பா ஆத்திரமடைந்தார். என் வாழ்க்கையில் உள்ள ஆண்கள் எனது பிரச்னைகளுக்காக போராடக்கூடாது. இலங்கையில் இருந்த தமிழ் பெண்களும், பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களும் சந்தித்த கஷ்டங்களை ஒப்பிடும் போது இது ஒன்றுமே இல்லை.
தன்னுடைய பிரச்னைகளுக்காக ஒரு பெண் போராடும் போது, மற்ற பெண்களையும் கவனித்து கொள்வார்.
ஆணவக் கொலை செய்யவும், அன்பை அழிக்கவும், பெண்களை இழிவுப்படுத்தவும் மதம் பயன்படுத்தப்படுகிறது. என்னை எவ்வளவு தாக்கினாலும் சமூக பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்.
எனக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை, இருப்பினும் கோவைக்கு அன்புடனும், தைரியத்துடனும் செல்வேன். பலமான பெண்கள் அன்பை வெளிப்படுத்துவதை நிறுத்த மாட்டார்கள்”
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.