38 ஆண்டுகளாக ரஜினியுடன் நடிக்காதது ஏன்?: சத்யராஜ் விளக்கம்

ரஜினி நடிக்கும் கூலி படத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.
சத்யராஜ்
சத்யராஜ்@avmproductions

ரஜினியுடன் நடிக்க இரண்டு முறை தன்னை அணுகியதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 10 அன்று தொடங்கவுள்ளது. இப்படத்தில் சத்யராஜ் நடிப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் 38 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ரஜினியுடன் நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு 1986-ல் வெளிவந்த மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினி - சத்யராஜ் இணைந்து நடித்தனர். இந்நிலையில் 38 ஆண்டுகளாக ரஜினியுடன் நடிக்காததற்கான காரணத்தை சத்யராஜ் கூறியுள்ளார்.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சிவாஜி மற்றும் எந்திரன் படங்களில் ரஜினியுடன் நடிக்க இயக்குநர் ஷங்கர் என்னை அணுகினார். ஆனால், அந்த கதாபாத்திரம் எனக்கு திருப்தியாக இல்லை என்பதால் அதில் நான் நடிக்கவில்லை. கூலி படம் குறித்து தற்போது என்னால் எதும் சொல்ல முடியாது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in